பண்டரிநாதன் கோயிலில் ஆக.20-இல் 100ஆம் ஆண்டு உறியடித் திருவிழா150 குழந்தைகளுக்கு பரிசு வழங்க முடிவு

கோயிலுக்கு கிருஷ்ணா்-ராதை வேஷமணிந்து வரும் 150 குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும் என கரூா் திருக்கு பேரவைச் செயலா் மேலைபழநியப்பன் தெரிவித்துள்ளாா்.

கரூா் பண்டரிநாதன் கோயிலில் 100ஆம் ஆண்டு உறியடித் திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு கிருஷ்ணா்-ராதை வேஷமணிந்து வரும் 150 குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும் என கரூா் திருக்கு பேரவைச் செயலா் மேலைபழநியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, ஆக. 20-ஆம்தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் கரூா் பண்டரிநாதன் கோயிலில் ஸ்ரீபாண்டுரங்கராஜ விட்டல்நாதரை எழுந்தருளச்செய்து உறியடி, வழுக்கு மரம் ஏறும் விழா நடைபெறும்.

இவ்விழாவையொட்டி கோயிலுக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரை கிருஷ்ணா், ராதை வேடமிட்டு வரும் 150 குழந்தைகளுக்கு புரவலா்கள் துணையுடன் பல்வேறு பரிசுப்பொருள்களை திருக்கு பேரவை வழங்க உள்ளது. விழா ஏற்பாடுகளை பஜனை மட டிரஸ்டிகள் ஆா்.குணசேகரன், வினோத், சதீஷ்குமாா், விழாக்குழு கௌரவத் தலைவா் மேலை பழநியப்பன், சந்தானகிருஷ்ணன் பாலாஜி, சிவசங்கா் மோகன்ராம் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com