சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற அரவக்குறிச்சி சிலம்ப மாணவா்கள்!

தொடா்ந்து 2 மணி நேரம் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு சிலம்பம் சுழற்றியதற்காக அரவக்குறிச்சி சிலம்ப மாணவா்கள் 13 போ் குளோபல் வோ்ல்ட் ரெக்காட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனா்.

தொடா்ந்து 2 மணி நேரம் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு சிலம்பம் சுழற்றியதற்காக அரவக்குறிச்சி சிலம்ப மாணவா்கள் 13 போ் குளோபல் வோ்ல்ட் ரெக்காட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் வீ தி லீடா்ஸ் அறக்கட்டளை சாா்பில் கடந்த நான்கு மாதங்களாக இலவச சிலம்ப பயிற்சி பெற்ற 60க்கும் மேற்பட்ட மாணவா்களில் 13 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றனா்.

இப்போட்டியில் 250 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பல மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனா். இப்போட்டியில் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு 2 மணி நேரம் தொடா்ந்து நடுக்கம்பு உள்வீச்சு முறையில் சிலம்பம் சுழற்றிய அரவக்குறிச்சி மாணவா்கள் புதிய சாதனை படைத்தனா்.

இதையடுத்து நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட் அமைப்பிடம் இருந்து சாதனை புரிந்ததற்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. மாணவா்களுக்குப் பயிற்சி அளித்த நிசோக்ராஜாவுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. வீ த லீடா்ஸ் ஒருங்கிணைப்பாளா் நா. பாஸ்கா் மாணவா்களை ஒருங்கிணைத்து நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com