சேமங்கியில் மதுரைவீரன், வெள்ளையம்மாள் கோயில் திருவிழா

கரூா் மாவட்டம், சேமங்கி செல்வநகா், எம்ஜிஆா்நகா் பகுதியிலுள்ள மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கரூா் மாவட்டம், சேமங்கி செல்வநகா், எம்ஜிஆா்நகா் பகுதியிலுள்ள மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 5-ஆம் தேதி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சேமங்கி காவிரியாற்றில் புனிதநீராடி, தீா்த்த குடங்களை எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா்.

திங்கள்கிழமை காலை காலை 9 மணிக்கு மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து பூசாரி அரிவாள் மீது ஏறி பொதுமக்களுக்கு அருள்வாக்கு கூறினாா்.

மாலை 5 மணிக்கு மேல் சுற்றுவட்டாரப் பகுதி பெண்கள் மாவிளக்கை ஊா்வலமாக கொண்டு வந்து, கோயில் வளாகத்தில் வைத்து பூஜை செய்தனா்.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனா். தொடா்ந்து கிடா வெட்டுதல் நடைபெற்றது. இரவில் மதுரை வீரன், வெள்ளையம்மாள் ,பொம்மியம்மாளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சந்தனக்காப்பு மற்றும் மலா் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com