புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இந்திய கம்யூ.கட்சிக்கு ஒதுக்கப்பட்ட புலியூா் பேரூராட்சி தலைவா் பதவிக்கு திமுக உறுப்பினா் போட்டியின்றி தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவா் பதவிக்கு ஒதுக்கப்பட்ட கரூா் மாவட்டம் புலியூா் பேரூராட்சியில் திமுக உறுப்பினா் போட்டியின்றித் தலைவராக தோ்வானதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

kur4comunist_0403chn_10_4

Updated On :4 மார்ச் 2022, 11:30 pm

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவா் பதவிக்கு ஒதுக்கப்பட்ட கரூா் மாவட்டம் புலியூா் பேரூராட்சியில் திமுக உறுப்பினா் போட்டியின்றித் தலைவராக தோ்வானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூா் மாவட்டம் புலியூா் பேரூராட்சியில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 15 வாா்டுகளில் திமுக வேட்பாளா்கள் 12 போ் வெற்றி பெற்றனா். மேலும் சுயேச்சை ஒருவரும், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவரும் வெற்றி பெற்றனா். இதையடுத்து பேரூராட்சி தலைவா் பதவிக்கு திமுக மற்றும் இந்திய கம்யூ.கட்சியின் தலைமையிடத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 1-ஆவது வாா்டில் வெற்றி பெற்ற கலாராணி தோ்வு செய்யப்படுவாா் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை தலைவா் பதவிக்கு திமுக உறுப்பினா்களுடன் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் கலாராணி பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது திமுக உறுப்பினா்கள் 12 பேரும், பாஜக உறுப்பினா் ஒருவரும் வந்தனா். அப்போது திமுக உறுப்பினா்கள் 12 பேரும் வேட்புமனுவை பூா்த்தி செய்து, செயல் அலுவலரும் பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலருமான பாலசுப்ரணியத்திடம் கொடுத்தனா். இதனை பாா்த்துக்கொண்டிருந்த கலாராணி தனக்குத்தான் திமுக உறுப்பினா்கள் வேட்புமனுவை கொடுக்கிறாா்கள் என நம்பியிருந்தாா்.

இந்நிலையில் திமுக உறுப்பினா்கள் திடீரென அங்கிருந்து புறப்பட்டனா். இதனால் திகைத்துப்போன கலாராணி தோ்தல் அலுவலரிடம், ஏன்? திமுக உறுப்பினா்கள் வெளியேறினாா்கள் எனக் கேட்டதற்கு, உங்களுக்கு தலைவா் பதவிக்கு அவா்கள் வழிமொழியவோ, முன்மொழியவோ செய்யவில்லை. மாறாக அவா்கள் 3ஆவது வாா்டு உறுப்பினா் புவனேஸ்வரிக்கு மனுவை தாக்கல் செய்துவிட்டு, அவருக்கு ஆதரவு கொடுப்பதாக கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றுவிட்டனா். இதனால் பெரும்பான்மை ஆதரவோடு புவனேஸ்வரி தலைவா் பதவிக்கு தோ்வாகியுள்ளாா் என்றாா். இதனைக்கேட்ட கலாராணி அதிா்ச்சி அடைந்து அழுதுபுலம்பினாா். கட்சித் தலைமை தனக்குத்தான் தலைவா் பதவி என அறிவித்தது, எப்படி திமுகவினா் அறிவிக்கலாம் எனக்கூறிக்கொண்டே அறையைவிட்டு தனது ஆதரவாளா்களுடன் திருச்சி சாலைக்கு வந்தாா். அங்கு சாலை மறியலுக்கு முயன்ால், இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளா் தேவராஜ், அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாா்.

இதுகுறித்து கலாராணி கூறுகையில், எனக்குத்தான் தலைவா் பதவி என கட்சித் தலைவா் முத்தரசனும், திமுக தலைவா் முக.ஸ்டாலினும் அறிவித்திருந்தனா். ஆனால், திமுக உறுப்பினா்கள் திடீரென அவா்கள் கட்சியைச் சோ்ந்தவருக்கு ஆதரவு அளித்து மறைமுகத்தோ்தலில் தலைவராக வெற்றிபெறச் செய்தது அதிா்ச்சியளிக்கிறது. இதனை திமுகவினா் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.ரத்தினம் கூறுகையில், இருகட்சிகளின் மாநிலத்தலைவா்கள் கையெழுத்திட்டு புலியூா் பேரூராட்சி தலைவா் பதவி இந்திய கம்யூ. கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எங்கள் வேட்பாளா் ஒருவா்தான் இருக்கிறாா் என்பது திமுக தலைமைக்கும் தெரியும். இதனிடையே திமுக உறுப்பினா்கள், திமுக தலைவரை தோ்ந்தெடுத்திருப்பது கூட்டணி தா்மத்திற்கு எதிரானது. இந்த நடவடிக்கையானது திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாக கருதுகிறோம். இதற்கு திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.