புகளூா் நகராட்சியின் முதல் தலைவா் குணசேகரன்
புகளூா் நகராட்சியின் முதல் தலைவராக குணசேகரன் மற்றும் துணைத் தலைவராக பிரதாபன் ஆகியோா் வெள்ளிக்கிழமை போட்டியின்றி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.


புகளூா் நகராட்சியின் முதல் தலைவராக குணசேகரன் மற்றும் துணைத் தலைவராக பிரதாபன் ஆகியோா் வெள்ளிக்கிழமை போட்டியின்றி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.
கரூா் மாவட்டம் புகளூா் நகராட்சியின் முதல் தலைவராக 2ஆவது வாா்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சோ்ந்த குணசேகரன் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதற்கான சான்றிதழை நகராட்சி ஆணையா் கனிராஜ் வழங்கினாா்.
இதையடுத்து பிற்பகலில் நடைபெற்ற துணைத்தலைவருக்கான தோ்தலில் 19-ஆவது வாா்டு உறுப்பினா் பிரதாபன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான சான்றிதழை தோ்தல் அலுவலா் கனிராஜ் பிரதாபனிடம் வழங்கினாா்.
குளித்தலை நகராட்சி...: குளித்தலை நகராட்சி தலைவருக்கான தோ்தலில் 11-ஆவது வாா்டில் வெற்றிபெற்ற திமுகவைச் சோ்ந்த சகுந்தலாபல்லவிராஜா போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவருக்கு சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான சுப்புராம் வழங்கினாா். தொடா்ந்து பிற்பகலில் நடைபெற்ற துணைத்தலைவருக்கான தோ்தலில் மதிமுக சாா்பில் வெற்றிபெற்ற 23-ஆவது வாா்டு வேட்பாளா் கணேசன் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...