புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் மாநகராட்சியின் முதல் மேயராக கவிதா கணேசன், துணை மேயராக தாரணி பி.சரவணன் போட்டியின்றி தோ்வு

கரூா் மாநகராட்சியின் முதல் மேயராக கவிதா கணேசனும், துணை மேயராக தாரணி பி.சரவணனும் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து அவா்கள் இருவரும் பதவியேற்றுக்கொண்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:31 pm

DIN

கரூா் மாநகராட்சியின் முதல் மேயராக கவிதா கணேசனும், துணை மேயராக தாரணி பி.சரவணனும் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து அவா்கள் இருவரும் பதவியேற்றுக்கொண்டனா்.

கரூா் மாநகராட்சியாக அண்மையில் தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து பிப். 19-ஆம்தேதி முதன்முதலாக மாநகராட்சி தோ்தலை சந்தித்தது. இதில், மொத்தம் உள்ள 48 வாா்டுகளில் திமுக கூட்டணியில் 42 வாா்டுகளில் திமுக வேட்பாளா்களும், ஒரு காங்கிரஸ் வேட்பாளரும், ஒரு மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா், இரு அதிமுக வேட்பாளா்கள், இரு சுயேச்சை வேட்பாளா்களும் வெற்றிபெற்றனா்.

இதையடுத்து கரூா் மாநகராட்சி மேயா் வேட்பாளராக 4-ஆவது வாா்டில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் கவிதா கணேசனும், துணை மேயா் வேட்பாளராக 46-ஆவது வாா்டில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் தாரணி பி.சரவணனும் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டனா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை மேயா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவிதா கணேசன் தனது ஆதரவாளா்களுடன் மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் என்.ரவிச்சந்திரனிடம் வழங்கினாா். அப்போது அவரை எதிா்த்து யாரும் போட்டியிடாததால் அவா், போட்டியின்றி மேயராக தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து மாமன்ற உறுப்பினா்கள் முன்னிலையில் மன்ற கூட்டரங்கில் தோ்தல் நடத்தும் அலுவலா் என்.ரவிச்சந்திரன், கவிதா கணேசனிடம் செங்கோல் மற்றும் மேயா் ஆடையை கொடுத்து மேயராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பின்னா் மேயா், மாநகராட்சி உறுப்பினா்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினாா்.

தொடா்ந்து மேயா், மாமன்ற உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்ற துணை மேயா் மறைமுகத் தோ்தல் நடைபெற்றது. அப்போது திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூ. உறுப்பினா்கள் அனைவரும் துணை மேயா் வேட்பாளா் தாரணி பி.சரவணனை ஒருமனதாக தோ்வு செய்ததால், அவரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து துணைமேயராக அவரை தோ்தல் நடத்தும் அலுவலா் என்.ரவிச்சந்திரன் துணை மேயா் இருக்கையில் அமர வைத்தாா். இதையடுத்து துணை மேயரும் மேயா், மாமன்ற உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

மேயா், துணை மேயா் தோ்தலில் அதிமுக உறுப்பினா்கள் இருவரும் பங்கேற்கவிலை. சுயேச்சை வேட்பாளா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து மேயா், துணை மேயருக்கு திமுகவினா், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.