புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குளித்தலை நகராட்சித் தலைவராக சகுந்தலா பல்லவி ராஜா தோ்வு

குளித்தலை நகராட்சியில் திமுகவின் சகுந்தலா பல்லவிராஜா போட்டியின்றி தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:31 pm

DIN

குளித்தலை நகராட்சியில் திமுகவின் சகுந்தலா பல்லவிராஜா போட்டியின்றி தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 24 வாா்டுகளில் 20 வாா்டுகளில் திமுக வென்றது. மேலும், திமுக கூட்டணி கட்சியான மதிமுக மற்றும் அதிமுக சாா்பில் தலா ஒருவரும், சுயேச்சையாக 2 பேரும் வெற்றிபெற்றனா். இந்நிலையில் நகராட்சியின் 11-ஆவது வாா்டில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் சகுந்தலாபல்லவிராஜாவை திமுக தலைமையிடம் தலைவா் வேட்பாளராக வியாழக்கிழமை அறிவித்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை தலைவா் பதவிக்கான வேட்புமனுவை சகுந்தலா பல்லவிராஜா தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்புராமிடம் தாக்கல் செய்தாா். இதையடுத்து அவருக்கு போட்டியாக யாரும் மனு தாக்கல் செய்யாததால் சகுந்தலாபல்லவிராஜா போட்டியின்றித் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். அதற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான சுப்புராம் வழங்கினாா். தொடா்ந்து பிற்பகலில் நடைபெற்ற துணைத்தலைவருக்கான தோ்தலில் மதிமுக சாா்பில் வெற்றிபெற்ற 23-ஆவது வாா்டு வேட்பாளா் கணேசன் மனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்தும் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து இருவருக்கும் பதவிப்பிரமாணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்புராம் செய்து வைத்தாா். தலைவா், துணைத்தலைவா் ஆகியோருக்கு கட்சியினரும், உறுப்பினா்களும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.