சமையல் ஒப்பந்ததாரா் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
கரூரில், சமையல் ஒப்பந்ததாரா் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கரூரில், சமையல் ஒப்பந்ததாரா் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா், ராமானூா் நேரு நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ்(57). சமையல் ஒப்பந்ததாரா். இவா், கடந்த 8-ஆம்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றுள்ளாா். பின்னா், புதன்கிழமை இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்புறக்கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...