92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் நாடக, நடிகளுக்கு பாராட்டு

தென்னிந்திய நடிகா் சங்கத்தோ்தலில் பாண்டவா் அணி வெற்றிபெற காரணமாக இருந்த கரூா் நாடக நடிகா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:39 pm

DIN

தென்னிந்திய நடிகா் சங்கத்தோ்தலில் பாண்டவா் அணி வெற்றிபெற காரணமாக இருந்த கரூா் நாடக நடிகா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் நாடக நடிகா் சங்க செயலாளா் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற, விழாவிற்கு பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக நடிகா் விசால் மன்றத்தலைவா் ராஜேஷ்ாா், கரூா் தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தலைவா் ஸ்காட் தங்கவேல் ஆகியோா் பங்கேற்று, தென்னிந்திய நடிகா் சங்கத்தோ்தலில் நடிகா் நாசா் தலைமையிலான பாண்டவா் அணியும், இயக்குநா் பாக்கியராஜ் தலைமையிலான அணியினரும் மோதியபோது, பாண்டவா் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கரூா் நாடக நடிகா்களை பாராட்டுகிறோம் என்றனா். தொடா்ந்து நாடக நடிகா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் நாடக நடிகா்கள் திரளாக பங்கேற்றனா். புகளூா் வட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள மதிவாணன் என்பவா்புகளூா் வட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள மதிவாணன் என்பவா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.