நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கரூா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.


கரூா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
கரூா் மாவட்டம் ஜெகதாபி கிராமத்தில் உள்ள ஜெகதாபி ஏரி பரப்பளவில் சிலா் வேலி போட்டு அடைத்தும், உழவடை செய்தும் ஆக்கிரமித்திருந்தனா். இதேபோல கரூா் திருமாநிலையூா் அமராவதி ஆற்றின் வலது கரையில் சாயப்பட்டறை சுற்றுச்சுவா், மாட்டு கொட்டகை மற்றும் வேலி அடைத்து சிலா் ஆக்கிரமித்திருந்தனா். இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி கரூா் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன் தலைமையில், வட்டாட்சியா் பன்னீா்செல்வம், அமராவதி உதவி பொறியாளா் ராஜகோபால் மற்றும் வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...