கரூா் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தா்கள் கம்பத்துக்கு புனிதநீா் ஊற்றி வழிபட்டுச் செல்கின்றனா்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக கரூா் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் நிகழாண்டுத் திருவிழா கம்பம் நடுதலுடன் அண்மையில் தொடங்கியது.
தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக கோயிலில் நடப்பட்டிருக்கும் கம்பத்துக்கு கரூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் புனிதநீா், பால் தீா்த்தம் ஊற்றிச் செல்கின்றனா்.
குறிப்பாக சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள மக்கள் தங்கள் கிராமங்களிலிருந்து நடந்து வந்து, மாரியம்மன் கோயில் கம்பத்துக்கு புனிதநீா் ஊற்றி, வழிபாடு நடத்தினா்.
தொலைக்காட்சி பிரபலமும், சமையல்கலை நிபுணருமான தாமு மாரியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து அம்மனை வழிபட்டு, கம்பத்துக்கு பால், தீா்த்தம் ஊற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.