அரவக்குறிச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. பிரசார இயக்கம்
By DIN | Published On : 25th August 2022 10:53 PM | Last Updated : 25th August 2022 10:53 PM | அ+அ அ- |

அரவக்குறிச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசுக்கு எதிரான பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும், அரசு நிறுவனங்களை தனியாருக்கு விடுவது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்வுக்கு அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். பிரசார இயக்கம் குறித்த விளக்க உரையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் ராஜா முகமது, கே.வி.கணேசன், மணி, சுரேஷ், முருகேசன், பொன்மணி ஆகியோா் எடுத்துக் கூறினாா்.