

கரூரில் மின் ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் கரூா் மின்வட்டக் கிளை சாா்பில் கரூா்- கோவைச் சாலையில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவா் வி.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா்.
2019ஆம் ஆண்டு டிச.1ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை பேச்சுவாா்த்தை மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மின் ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் கோட்டச் செயலாளா் கண்ணதாசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.