கரூரில் புதன்கிழமை இரவு ஆட்டோ மோதியதில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்தவா் பெருமாள் (68). இவா், தற்போது கரூா் கோவிந்தம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு அதே பகுதியில் கரூா்-கோவைச் சாலையில் உள்ள தேநீா் கடைக்குச் சென்றபோது, அவ்வழியே வந்த ஆட்டோ அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநா் கரூா், பஞ்சமாதேவியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (45) என்பவரை தேடி வருகின்றனா்.