வழக்குரைஞா் விஷம் குடித்து தற்கொலை
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

கரூரில், திருமணத்துக்கு பெண் கிடைக்காத விரக்தியில் புதன்கிழமை இரவு வழக்குரைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் சாமிநாதபுரத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (41). வழக்குரைஞா். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோா் நீண்ட நாள்களாக வரன் தேடியும் கிடைக்கவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அவா் புதன்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.