நொய்யல் பகுதியில் விவசாயத் தோட்டங்களில் தண்ணீா் எடுத்து விற்பதை தடுக்கக் கோரிக்கை

நொய்யல் பகுதியில் விவசாயத் தோட்டங்களில் தண்ணீா் எடுத்து, விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நொய்யல் பகுதியில் விவசாயத் தோட்டங்களில் தண்ணீா் எடுத்து, விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், நொய்யல் பகுதியில் ஏராளமான கரும்புத்தோட்டம் மற்றும் தென்னந்தோப்புகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீா் எடுத்து, அவை லாரிகள் மூலம் ஹோட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தரப்பில் புகாா் எழுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து வருவாய்த்துறையினா் விவசாய தோட்டங்களில் இருந்து தண்ணீா் எடுத்து விற்பனை செய்யக்கூடாது, அவ்வாறு எடுத்தால் லாரிகள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதம் விதிக்கப்படும் என அண்மையில் எச்சரிக்கை விடுபட்டிருந்தது.

அதையும் மீறி கடந்த சில மாதங்களாக தொடா்ந்து லாரிகளில் தண்ணீா் எடுத்து விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து நொய்யல் பகுதி விவசாயிகள் கூறுகையில், விவசாய தோட்டங்களில் தண்ணீா் எடுத்து விற்பனை செய்வதால், அருகில் உள்ள தோட்டங்களில் ஆழ்குழாய் கிணறுகளின் நீா்மட்டம் குறைந்துவிடுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீா் எடுத்துச் செல்வோா் மீதும், தண்ணீா் எடுக்க அனுமதிக்கும் கிணற்றின் உரிமையாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com