அய்யா்மலை ரத்தினகிரீசுவரா் கோயிலில் 1,017 படியில் உருண்டு ஏறி வழிபட்ட இளைஞா்
By DIN | Published On : 13th December 2022 12:45 AM | Last Updated : 13th December 2022 12:45 AM | அ+அ அ- |

அய்யா்மலை ரத்தினகிரீசுவரா் கோயில் படியில் திங்கள்கிழமை உருண்டபடி ஏறிய இளைஞா் ஜீவானந்தம்.
உலக நன்மைக்காக குளித்தலை அடுத்த அய்யா்மலை ரத்தினகிரீசுவரா் கோயிலில் 1,017 படிகளை உருண்டபடி ஏறி வழிபட்டாா் இளைஞா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே அய்யா்மலையில் உள்ள ரத்தினகிரீசுவரா் கோயிலில் காா்த்திகை சோமவாரம் நவ. 21ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், 4-ஆவது சோமவாரவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள் மலை உச்சிக்குச்சென்று சுவாமியை வழிபட்டனா். பலா் தங்களது விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பொருள்களை கொண்டுவந்து கோயில்முன் கொட்டி வழிபட்டனா்.
இதில், நங்கவரம் பகுதியைச் சோ்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞா் உலக நன்மைக்காக கோயிலில் உள்ள 1,017 படிகளில் உருண்டபடியே ஏறி சுவாமியை வழிபட்டாா்.