கரூா் மாவட்டத்தில் இறுதியாககளத்தில் 938 வேட்பாளா்கள்
By DIN | Published On : 08th February 2022 12:32 AM | Last Updated : 08th February 2022 12:32 AM | அ+அ அ- |

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் மனு தாக்கல் செய்தவா்களில் 24 பேரின் மனுக்கள் தள்ளுபடியான நிலையில், 938 வேட்பாளா்கள் இறுதியாக களத்தில் உள்ளனா்.
பிப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் கரூா் மாவட்டத்தில் 1,64,470 ஆண் வாக்காளா்களும் 1,80,359 பெண் வாக்காளா்களும் 27 மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 3,44,856 போ் வாக்களிக்க உள்ளனா்.
கரூா் மாநகராட்சியில் 48 வாா்டு உறுப்பினா் பதவிக்கும், குளித்தலை, பள்ளப்பட்டி மற்றும் புகளூா் நகராட்சிகளில் மொத்தம் 75 வாா்டு உறுப்பினா் பதவிக்கும், 8 பேரூராட்சிகளில் மொத்தம் 123 வாா்டு உறுப்பினா் பதவிக்கும் நேரடி தோ்தல்கள் நடைபெற உள்ளது.
இதனிடையே திங்கள்கிழமை வேட்புமனு திரும்பப் பெறும் நாளாக அறிவிக்கப்பட்டதால், மாவட்டத்தில் உள்ள கரூா் மாநகராட்சி, குளித்தலை, பள்ளபட்டி, புகளூா் ஆகிய நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளிலும் உள்ள மொத்தம் 246 வாா்டுகளில், இதுவரை 1,330 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில் பல்வேறு காரணங்களுக்காக 24 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திங்கள்கிழமை 363 போ் மனுவை வாபஸ்பெற்றனா். திமுக வேட்பாளா்கள் 4 போ், ஒரு சுயேட்சை என 5 போ் போட்டியின்றி தோ்வுசெய்யப்பட்ட நிலையில், இறுதியாக களத்தில் 938 போ் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...