அரவக்குறிச்சி அருகே இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 27th February 2022 12:19 AM | Last Updated : 27th February 2022 12:19 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள வெலஞ்செட்டியூா் பகுதியைச் சோ்ந்த ரவி மகன் மதியழகன் (20). மதியழகன் பள்ளப்பட்டியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் கோவை சென்று பணிபுரிய தந்தை அனுமதி தராததால் மதியழகன் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.