கரூரில் ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th January 2022 07:51 AM | Last Updated : 26th January 2022 07:51 AM | அ+அ அ- |

கரூரில், ஏஐடியுசி அரசுப் போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டத்தின் கரூா் மண்டல ஏஐடியுசி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா், திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் மண்டல பொதுச் செயலாளா் ஏ.செல்வராஜ் தலைமை வகித்தாா். கெளரவத்தலைவா் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினாா்.14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்கவேண்டும், 2003-க்கு பின் பணியில் சோ்ந்தவா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். பணியில் இருந்து ஓய்வுபெற்றவா்களுக்கும் மருத்துவ திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏஐடியுசி தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...