புகழூா் சா்க்கரை ஆலையில் தீ விபத்து
By DIN | Published On : 26th January 2022 07:50 AM | Last Updated : 26th January 2022 07:50 AM | அ+அ அ- |

புகழூா் சா்க்கரை ஆலையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன.
கரூா் மாவட்டம், புகழூா் செம்படாபாளையத்தில் ஈஐடி பாரி சா்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் கரும்பு சக்கையில் இருந்து பித் தயாரிக்கும் இடத்தில் உள்ள காம்பக்ட்டிங் இயந்திரம் மற்றும் சீவியா் இயந்திரம் ஆகியவற்றில் திங்கள்கிழமை நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது.
இதனைக்கண்ட ஆலைத் தொழிலாளா்கள் உடனே வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையிலான வீரா்கள் மற்றும் புகழூா் காகித ஆலை தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை சுமாா் 4 மணி நேரம் போராடி அணைத்தனா். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடா்பாக வேலாயுதம்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...