அரவக்குறிச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆண்டிபட்டிகோட்டை அருகே உள்ள இசட். ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் என்பவரது முருங்கைத் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிஇதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், அப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஸ்கரன் (59), ரவி (47), பரமேஸ்வரன் (45), முத்துசாமி (55), சக்திவேல் (40), ஆறுமுகம் (32), சுப்பிரமணி (45) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.