கரூரில் தானியம், அரிசி கடைகள் அடைப்பு
By DIN | Published On : 17th July 2022 12:58 AM | Last Updated : 17th July 2022 12:58 AM | அ+அ அ- |

கரூரில், தானியம் மற்றும் அரிசி விற்பனைக் கடைகள் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.
அரிசி மற்றும் தானியங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி உயா்த்தியதைக் கண்டித்து கரூரில் தானியம் மற்றும் அரிசி விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த கடையடைப்பு போராட்டத்தினால் கரூா் ஜவஹா்பஜாா், உழவா்சந்தை, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.