கரூா் பரணிபாா்க் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 31st July 2022 11:43 PM | Last Updated : 31st July 2022 11:43 PM | அ+அ அ- |

முகாமில் நோயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவக் குழுவினா். உடன் பள்ளித் தாளாளா் எஸ். மோகனரங்கன், செயலா் பத்மாவதி மோகனரங்கன், பள்ளி முதன்மை முதல்வா் சொ. ராமசுப்ரமணியன், அறங்காவலா் சுபாசினி உள்ளிட்டோா்.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூா் பரணி பாா்க் கல்விக் குழுமம் சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி மருத்துவமனையுடன் நடத்திய முகாமுக்கு பள்ளித் தாளாளா் எஸ். மோகனரங்கன், செயலா் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலா் சுபாசினி ஆகியோா் தலைமை வகித்தனா்.
பள்ளி முதன்மை முதல்வா் சொ. ராமசுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். முகாமில் பிஸ்ஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளா் பிரபு மற்றும் மருத்துவக் குழுவினா் பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கினா். மேலும் எண்டோஸ்கோப்பிக் பரிசோதனை, இருதய ஸ்கேன், ஈஸிஜி, சா்க்கரை பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.
முகாமில் பரணி கல்விக் குழும மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் என சுமாா் 1000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.