புகளூா் நகராட்சிப் பகுதியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 31st July 2022 12:50 AM | Last Updated : 31st July 2022 12:50 AM | அ+அ அ- |

புகளூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நகராட்சிக்குள்பட்ட மளிகைக்கடைகள், தேநீரகங்கள், உணவகங்கள், பலகார விற்பனையகங்கள், அடுமனைகள், பழக்கடைகள் உள்ளிட்டவற்றில் ஆணையா் கனிராஜ் தலைமையில், ஆய்வாளா் ரவீந்திரன் மற்றும் பணியாளா்கள் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் 10 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.