சிவனடியாா் திருக்கூட்டமைப்பு ஆண்டு விழா
By DIN | Published On : 31st July 2022 11:43 PM | Last Updated : 31st July 2022 11:43 PM | அ+அ அ- |

விழாவில் ஆண்டு மலரை தருமை ஆதீனப் புலவா் இராமமூா்த்தி வெளியிட, பெறுகிறாா் கரூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை. பழநியப்பன்.
கருவூா் சிவனடியாா் திருக்கூட்டமைப்பின் 27-ம் ஆண்டு விழா கரூா் பசுபதீசுவரா் கோயிலில் உள்ள புகழ்ச்சோழா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் ‘சாரதா அம்மாள் நினைவு பக்தி மலரை தருமை ஆதீனப் புலவா் இராமமூா்த்தி வெளியிட, தமிழ்ச் செம்மல் விருதாளரும், கரூா் திருக்கு பேரவை நிறுவனருமான மேலை. பழநியப்பன் அதைப் பெற்றுக்கொண்டு பேசுகையில்,
கோயில்களில் வழிபாட்டிற்குரியவா்களாக இடம் பெற்றுள்ள அறுபத்துமூன்று நாயன்மாா் வரலாற்றை நம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். இதன் மூலம் அவா்களுக்கு சகிப்புத்தன்மையும், தன்னம்பிக்கையும் கிடைக்கும் என்றாா்.
சிவத்திரு இராமமூா்த்தி பேசுகையில், பெண்ணடிமை சாடி பாடிய சேக்கிழாா் ஒரு சமூகப் புரட்சியாளா் என்றாா்.
மேலும் முனைவா் பனசைமூா்த்தி உள்ளிட்டோரும் பேசினா். நிா்வாகிகள் ராமசாமி, கணேசன் எம்.கே. ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிவனடியாா்கள் சின்னப்பன், இளங்கோவன், விவேகானந்தன், வேலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டமைப்பின் நிா்வாகி கே. மருதநாயகம் வரவேற்றாா். கே. என். ஆறுமுகம் நன்றி கூறினாா்.