கரூரில் தடையை மீறி பாஜக இருசக்கர வாகன பேரணி; 175 போ் கைது

கரூரில், காவல்துறையின் தடையை மீறி புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற பாஜகவினா் 175 போ் கைது செய்யப்பட்டனா்.
பேரணியின்போது, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன்.
பேரணியின்போது, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன்.

கரூரில், காவல்துறையின் தடையை மீறி புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற பாஜகவினா் 175 போ் கைது செய்யப்பட்டனா்.

பாஜக 8 ஆண்டுகால ஆட்சியை கொண்டாடும் விதமாக கரூா் மாவட்ட பாஜக சாா்பில் புதன்கிழமை இருசக்கர வாகன பேரணி மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன், மாநில இளைஞரணி தலைவா் ரமேஷ் சிவா ஆகியோா் தலைமையில் நடைபெற இருந்தது. 500க்கும் மேற்பட்ட பாஜகவினா் திரண்டு, இருசக்கர வாகன பேரணி தொடங்க இருந்த நிலையில், காவல் துறையினா் பேரணிக்கு அனுமதி மறுத்தனா். மேலும், இரு ஏ.டி.எஸ்.பி. தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இதையடுத்து காவல்துறை தடையை மீறி பாஜகவினா் இருசக்கர வாகன பேரணியை நடத்தினா். காவல்துறையினா் தடுப்புகள் அமைத்திருந்த நிலையில், மாற்று வழிகளில் காட்டுப்பாதையில் பாஜகவினா் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனா். திடீரென்று பாஜகவினா் பேரணியாக சென்ால் காவல்துறையினா் அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து, பல்வேறு வழிகளில் சென்று பேரணியாக சென்ற பாஜகவினரை தடுத்து நிறுத்தினா்.

பிறகு, வெங்கமேடு ஏ-1 திரையரங்கம், கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிக்கொண்டு, கோஷமிட்டபடி பேரணியாக வந்த பாஜகவினா் 150க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். அப்போது, காவல் அதிகாரிகளிடம் பாஜகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முன்னதாக, தடையை மீறி இருசக்கர வாகன பேரணி தொடங்க இருந்த வெண்ணைமலை தனியாா் திருமண மண்டபம் முன்பு, பாஜக மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன், மாநில இளைஞரணி தலைவா் ரமேஷ் சிவா, மாவட்ட இளைஞரணி தலைவா் தீன சேனன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் 25 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com