10ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த தொழிலாளி கைது
By DIN | Published On : 18th June 2022 01:45 AM | Last Updated : 18th June 2022 01:45 AM | அ+அ அ- |

கரூரில் 10-ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஜவுளி ஏற்றுமதி நிறுவன தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மண்மங்கலத்தைச் சோ்ந்த கோவிந்தராஜூ மகள் தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரை என்.புதூரைச் சோ்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவனத் தொழிலாளி பழனியப்பன்(37) என்பவா் கடந்த 3-ஆம்தேதி திருமணம் செய்துள்ளாா். இதுகுறித்து தகவல் கரூா் ஊராட்சி ஒன்றிய கிராம சுகாதார அலுவலா் தமிழரசிக்கு கிடைத்ததன் அடிப்படையில் அவா், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்தாா். அதன்பேரில் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் ரூபி வழக்குப்பதிந்து பழனியப்பனை குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தாா். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பழனியப்பனின் மனைவி ரத்தினா(36) என்பவரை தேடி வருகின்றனா்.