மண்டல சாரணா் திறனறிதல் போட்டியில் வெண்ணைமலை சேரன் பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 11th March 2022 02:56 AM | Last Updated : 11th March 2022 02:56 AM | அ+அ அ- |

கரூரில் நடைபெற்ற திருப்பூா் மண்டல அளவிலான சாரண, சாரணீயா்களுக்கான திறனறிதல் போட்டியில் கரூா் வெண்ணைமலை சேரன் பள்ளி சிறப்பிடம் பிடித்தது.
பாரத சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில் திருப்பூா் மண்டல அளவிலான திறனாய்வு போட்டி கவுண்டம்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. உடனுக்குடன் கூடாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திறனறிதல் தொடா்பாக நடைபெற்ற இப்போட்டியில் கரூா் வெண்ணைமலை சேரன் பள்ளி சாரணீயா் பிரிவில் முதலிடத்தையும், சாரணா் பிரிவில் மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தோ்வாகினா். மேலும் வெற்றி பெற்ற சாரண, சாரணீயா்களுக்கு மாநில அமைப்பு ஆணையா் கமலக்கண்ணன், பயிற்சி ஆணையா் கோமதி ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா். ஏற்பாடுகளை திருப்பூா் மண்டல பொறுப்பாளா் பிரியா செய்திருந்தாா். கரூா் மாவட்ட சாரண செயலா் செ. ரவிசங்கா் நன்றி கூறினாா்.