பள்ளப்பட்டியில் தெருமுனைக் கூட்டம்
By DIN | Published On : 17th March 2022 01:24 AM | Last Updated : 17th March 2022 01:24 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி: கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் முழு அடைப்பு போராட்டம் குறித்த தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அனைத்துத் தொழிலாளா்கள் சங்கங்கள் சாா்பில் மாா்ச் 28,29-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெறவுள்ளது இதற்கான முன்னேற்பாடாக, பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகே தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
அரவக்குறிச்சி விவசாயிகள் நலச் சங்க ஒன்றியத் தலைவா் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அனைத்துத் தொழிலாளா்கள் சங்கங்களின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.