முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மாவட்ட ஆட்சியிரிடம் மனு
By DIN | Published On : 18th March 2022 01:34 AM | Last Updated : 18th March 2022 01:34 AM | அ+அ அ- |

அதிமுக வாா்டு உறுப்பினா்களின் பகுதிகளுக்கு திட்டப்பணிகள் வழங்கப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மாவட்ட ஆட்சியா் பிரபுசங்கரிடம் வியாழக்கிழமை மனு வழங்கினாா்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டத்தில் அதிமுகவை சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு கடந்த 10 மாதமாக உள்ளாட்சியில் வரக்கூடிய நிதிகள் அவா்களுக்கு வழங்கவில்லை. வந்த நிதிகளை திமுக உறுப்பினா்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என கூறி அதிமுக உறுப்பினா்களை புறக்கணிக்கிறாா்கள். அதிமுகவை சோ்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நிதி ஒதுக்கீடு செய்யமாட்டோம் என மிரட்டி திமுகவில் இணைத்துள்ளனா். இதேபோல் ஒன்றியங்களில் உள்ள விதிகளை தவறான முறையில் பயன்படுத்துகின்றனா். மேலும் அதிமுக ஒப்பந்ததாரா்களை மிரட்டி கட்சி மாற கூறி வருகின்றனா். இது ஜனநாயக நாடு இதுபோன்ற அடக்கு முறைகளை கரூரில் கண்டதில்லை. மீறினால் அதிமுகவினா் மீது வழக்கு போடப்படுகிறது. இதே போல்தான் காதப்பாறை ஊராட்சித் தலைவா் மீது வழக்குப் பதிந்துள்ளனா். இது போன்ற செயல்களை அதிமுக தலைமையிடம் எடுத்துக் கூறியுள்ளோம். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா்கள் மாவட்ட ஆட்சியா்கள் மாநாட்டில் இதுபோன்று நடக்கக்கூடாது என தமிழக முதல்வா் கூறியிருந்தாா். ஆனால், அவா் கூறியதற்கு எதிராகவே கரூரில் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளாா்.
படவிளக்கம்: கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கரிடம் மனு அளிக்கும் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா். உடன், கரூா் தொகுதி முன்னாள் செயலா் எஸ். திருவிகா.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...