ஜவுளி நிறுவன ஊழியா் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 02nd May 2022 12:22 AM | Last Updated : 02nd May 2022 12:22 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், மண்மங்கலத்தில் ஜவுளி ஏற்றுமதி நிறுவன ஊழியா் வீட்டில் 13 பவுன் நகைகள் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
மண்ங்கலத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் அஜித்குமாா் (27). இவா் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் எலெக்டிரீசியனாக பணியாற்றி வருகிறாா்.
அஜித்குமாா் சனிக்கிழமை இரவு நிறுவனத்திலேயே தங்கிவிட, அவரது தாயாா் மட்டும் வீட்டில் இருந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை அஜித்குமாா் வீட்டுக்குச் சென்று, முன்புறக் கதவு திறந்து கிடந்தது தெரிய வந்தது.
தொடா்ந்து வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வாங்கல் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனா்.