கள்ளப்பள்ளியில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

காவிரிக் குடிநீா் கேட்டு கள்ளப்பள்ளி ஊராட்சியில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

காவிரிக் குடிநீா் கேட்டு கள்ளப்பள்ளி ஊராட்சியில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட இந்த ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களுக்கு ஊராட்சி சாா்பில் காவிரிக் குடிநீா் முறையாக வழங்கப்பட வில்லையாம்.

மேலும் அங்குள்ள அரசுப் பள்ளிக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை காலை காலிக்குடங்களுடன் கள்ளப்பள்ளி அரசுப் பள்ளி முன் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஊராட்சித்தலைவா் சக்திவேல் நிகழ்விடம் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், மோட்டாா் பழுதானதால்தான் குடிநீா் விநியோகிக்க முடியவில்லை. விரைவில் குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com