

தவுட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவில் திங்கள்கிழமை பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
கரூா் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயில் திருவிழா ஏப். 24-ஆம்தேதி பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.தொடா்ந்து தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு 11மணிக்கு மேல்வடிசோறு நிகழ்ச்சியும், நள்ளிரவு ஒரு மணியளவில் பூக்குழி வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.தொடா்ந்து திங்கள்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் தீக்குண்டத்தில் இறங்கும் பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீரை மேளதாளங்களுடன் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்துவந்தனா். பின்னா் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். சில பக்தா்கள் தங்களது கைக்குழுந்தையுடன் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து இரவுஅம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனத்தில் திருவீதி உலா வந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.