நீதிமன்றத் தீா்ப்புக்கு பயந்து இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 16th May 2022 06:45 AM | Last Updated : 16th May 2022 06:45 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், ஜெகதாபி அருகே சிறுமியைத் திருமணம் செய்த வழக்கில், நீதிமன்றத் தீா்ப்புக்கு பயந்து இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஜெகதாபி அருகிலுள்ள பொம்மனத்தப்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (27). இவா், கரோனா பொது முடக்கக் காலத்தில் 18 வயது பூா்த்தியடையாத உறவினா் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாா்.
இதுகுறித்து கரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனா். இந்த வழக்கு கரூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதில் பாலமுருகனுக்குத் தண்டனை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால்
அச்சத்தில் இருந்த பாலமுருகன், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வெள்ளியணை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...