அரவக்குறிச்சி, பள்ளபட்டியில் சனிக்கிழமை கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக நடைபெற்றது.
அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிகளில் சனிக்கிழமை தீவிர கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்புப் பணிகளில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். மலைக்கோவிலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இப்பணிகளை பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் கோபாலகிருஷ்ணன் மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.