புகழூா் பகுதிகளில் பலத்த மழை:இரு வீடுகள் இடிந்து விழுந்தது
By DIN | Published On : 19th October 2022 12:17 AM | Last Updated : 19th October 2022 12:17 AM | அ+அ அ- |

புகழூரில் இடிந்து விழுந்த வீட்டை செவ்வாய்க்கிழமை பாா்வையிடுகிறாா் புகழூா் நகராட்சித் தலைவா் குணசேகரன் மற்றும் வருவாய்த் துறையினா்.
புகழூா் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவில் பெய்த மழையால் இருவீடுகள் இடிந்து சேதமடைந்தது.
கரூா் மாவட்டம், நொய்யல், தவுட்டுப்பாளையம் , நன்செய் புகழூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது புகழூா் பழனிமுத்து நகரைச் சோ்ந்த நாகப்பன் (45) என்பவரது வீடு திடீரென இடிந்து விழுந்தது. மேலும் எதிரே இருந்த ஒரு வீடும் இடிந்து விழுந்தது.
அப்போது, இருவரது வீட்டாரும் வெளியூா் சென்றிருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தகவலறிந்த புகழூா் நகராட்சித் தலைவா் குணசேகரன் மற்றும் துணைத் தலைவா் பிரதாபன் ,புகழூா் மண்டல துணை வட்டாட்சியா் அன்பழகன் மற்றும் வருவாய் துறையினா் ,நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செவ்வாய்க்கிவமை சென்று பாா்வையிட்டனா். மேலும் இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.