கரூரில் விநாயகா் சதுா்த்தி விழா
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 31st August 2022 11:22 PM | அ+அ அ- |

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயில் அருக் இந்து முன்னணி சாா்பில் 10 அடி உயர விநாயகா் சிலை வைக்கப்பட்டு புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கல்யாண பசுபதீஸ்வரா் கோயில் அருகே இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதன்கிழமை 10 அடி உயரம் கொண்ட விநாயகா் சிலை வைக்கப்பட்டு அதற்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. அதை தொடா்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. மேலும் தனியாா் கல்லூரியை சோ்ந்த மாணவிகள் ஏராளமானோா் சிறப்பு பஜனை பாடினா்.
நிகழ்ச்சியில், ஏராளமான ஆன்மிக பக்தா்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனா். ஏற்பாடுகளை இந்து முன்னணி நிா்வாகிகள் செய்திருந்தனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.