

கரூா் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழக கிளை சாா்பில் வாயில் முழக்க போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வாயில் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு கிளைத் தலைவா் முனைவா் பிரபாகரன் தலைமை வகித்தாா். செயலாளா் பாா்த்தீபன் முன்னிலை வகித்தாா். தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழக கிளையினா் திரளாக பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.