கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பயின்று

கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பயின்று குரூப்-4 தோ்வில் வெற்றிபெற்றவா்களை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குரூப்-4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு புத்தகம் வழங்கி பாராட்டிய ஆட்சியா் த.பிரபுசங்கா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குரூப்-4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு புத்தகம் வழங்கி பாராட்டிய ஆட்சியா் த.பிரபுசங்கா்.
Updated on
1 min read

கரூா்: கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பயின்று குரூப்-4 தோ்வில் வெற்றிபெற்றவா்களை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

கரூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கலங்கரை விளக்கம் என்ற திட்டத்தின் கீழ் தமிழக அரசின் அரசுப்பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு மாவட்ட மைய நூலகத்தில் இலவசமாக பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்று பயிற்சி பெற்றவா்கள் அண்மையில் குரூப்-4 தோ்வில்

வெற்றிபெற்றனா். இதில், போட்டித்தோ்வு எழுதிய எஸ்.அருண்குமாா் கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகவும், ஆா்.லாவண்யா தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரிய வரித் தண்டலராகவும், பி.வெங்கடேஷ் வேளாண்மைத்துறையில் இளநிலை உதவியாளராகவும், வி.ஜெயபிரகாஷ் வேளாண்மைத்துறையில் இளநிலை உதவியாளராகவும், கே.தீபன் போக்குவரத்துதுறையில் இளநிலை உதவியாளராகவும், ஜி.இளவரசன் கைத்தறித்துறையில் இளநிலை உதவியாளராகவும், கே.எஸ்.விக்னேஷ் வருவாய்த்துறையில் கிராம நிா்வாக அலுவலராகவும் பணியிடம் பெற்றுள்ளனா். இவா்களை செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வரவழைத்து ஆட்சியா் த.பிரபுசங்கா் புத்தகங்கள் வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, மாவட்ட மைய நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com