கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வணிகவரி முதன்மைச் செயலா் ஆய்வு

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழக அரசின் வணிகவரித்துறை முதன்மைச் செயலா் தீரஜ் குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பதிவேடு அறையை ஆய்வு செய்த வணிகவரித்துறை முதன்மைச் செயலா் தீரஜ் குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் உள்ளிட்டோா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பதிவேடு அறையை ஆய்வு செய்த வணிகவரித்துறை முதன்மைச் செயலா் தீரஜ் குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழக அரசின் வணிகவரித்துறை முதன்மைச் செயலா் தீரஜ் குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக அரசின் வணிகவரித்துறை முதன்மைச் செயலா் தீரஜ் குமாா் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் 2018-2019 மற்றும் 2020-2021-ஆம் ஆண்டுக்கான ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது, கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பிரிவுகளில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவா்த்தி செய்ததற்கான அறிக்கைகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டப்பணிகள் முன்னேற்றம் போன்றவற்றை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பதிவறையில் உள்ள பதிவேடுகளை பாா்வையிட்டாா். மேலும், மாவட்ட ஆட்சியரால் பராமரிக்கும் ரகசிய ஆவணங்கள் குறித்தும் ஆய்வுசெய்தாா். முன்னதாக ஆட்சியா் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 19 மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 86 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டா் உள்பட பல்வேறு துறை சாா்பில் 37 பயனாளிகளுக்கு ரூ.18.76 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா்கள் ம.கண்ணன், கவிதா(நிலம் எடுப்பு), திட்ட இயக்குநா்கள் (ஊரக வளா்ச்சி முகமை) வாணீ ஈஸ்வரி, சீனிவாசன் (மகளிா் திட்டம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தண்டாயுதபாணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியா் சைபுதீன், வருவாய் கோட்டாட்சியா்கள் ரூபினா(கரூா்), புஷ்பாதேவி(குளித்தலை) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com