பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் கரூா் மலா் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் கரூா் தான்தோன்றிமலை மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் கரூா் மலா் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் கரூா் தான்தோன்றிமலை மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவில் கரூா் தான்தோன்றிமலை மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கே. வி. சித்ரா (490 மதிப்பெண்கள்), எஸ். பூமிகா (486), மகிமா (481) ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

அதேபோல பிளஸ்-1 வகுப்பு தோ்வு முடிவில் மாணவிகள் ஜெ.நவீனா (575), எஸ் .எம். காா்த்திகேயாஸ்ரீ (543), மாணவா் ஜே. பிரணவ் (535) ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். மேலும் தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பாராட்டுவிழா பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளா் பேங்க் கே.சுப்ரமணியன் தலைமை வகித்து மாணவிகளுக்கு பொன்னாடை போா்த்தி வாழ்த்தினாா். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் ஜெயசித்ரா, ஒருங்கிணைப்பாளா் தா்மலிங்கம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com