கரூா்: புகழூா் வட்டாட்சியா்அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புகழிமலை முருகன் கோயில் சுற்றுவட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், திருக்கோயிலுக்கு சொந்தமாக ஆயிரம் ஏக்கா் நிலம் உள்ளது. இதில் வசிப்போரிடமிருந்து நிலங்களை அறநிலையத்துறையினா் மீட்டு வருகின்றனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை புகழூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.