கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ரூ.34 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.34 லட்சம் மதிப்பிலான புதிய நலத்திட்டப் பணிகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கஞ்சமனூா் மாரியம்மன் கோயில் அருகே நாடக மேடை கட்டும் பணிக்கான பூமி பூஜையைத் தொடக்கி வைத்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.சிவகாம சுந்தரி.
கஞ்சமனூா் மாரியம்மன் கோயில் அருகே நாடக மேடை கட்டும் பணிக்கான பூமி பூஜையைத் தொடக்கி வைத்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.சிவகாம சுந்தரி.
Updated on
1 min read

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.34 லட்சம் மதிப்பிலான புதிய நலத்திட்டப் பணிகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குள்பட்ட பிச்சம்பட்டி மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட லட்சுமணம்பட்டி ஆகிய இடங்களில் தலா ரூ.9.77 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம், உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட கஞ்சமனூரில் மாரியம்மன் கோயில் அருகே ரூ.8 லட்சம் மதிப்பில் நாடக மேடை, ஜோதிவடம் புதுத் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தாந்தோணி ஒன்றியச் செயலாளா் எம்.ரகுநாதன், கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளா் ரவிராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி புதிய திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்துப் பேசினாா். உப்பிடமங்கலம் பேரூராட்சி திவ்யம் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com