கரூா் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 18th April 2023 02:14 AM | Last Updated : 18th April 2023 02:14 AM | அ+அ அ- |

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 475 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்பட பல்வேறு துறை சாா்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.