

கரூா் மாவட்டத்தில் கோடை கால குடிநீா் பற்றாக்குறையைப் போக்கும்வகையில், கரூா் வாங்கல் காவிரி ஆறு, அமராவதி ஆற்றுப் பகுதிகளில் ரூ.60 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் நீா் உறிஞ்சி கிணறுகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக மாநகராட்சி மேயா் கவிதா கணேசன் தெரிவித்தாா்.
கரூா் அமராவதி ஆற்றில் ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகள், காவிரி ஆற்றில் வாங்கல் அருகே குடிநீா் உறிஞ்சும் கிணறும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்ட மாநகராட்சி மேயா் கவிதா கணேசன் மேலும் கூறுகையில், அமைச்சா் செந்தில்பாலாஜியின் முயற்சியால், கோடை கால குடிநீா் பற்றாக்குறையைப் போக்க கரூா் அமராவதி ஆறு, வாங்கல் காவிரி ஆறுகளில் ஆழ்குழாய் மற்றும் குடிநீா் உறிஞ்சும் கிணறு ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்க உள்ளோம். இந்தப் பணிகள் வரும் 15 நாள்களுக்குள் முடிந்துவிடும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளா் நக்கீரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.