

மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து கரூரில் சுய ஆட்சி இந்தியா அமைப்பினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.வேலுபெரியசாமி தலைமை வகித்தாா். மாவட்ட குழு உறுப்பினா் ஆா்.மஞ்சுளா வரவேற்றாா். தந்தை பெரியாா் தி.க. மாவட்டத் தலைவா் கு.கி.தனபால், ஆதித் தமிழா் முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளா் இரா.முல்லையரசு, ராஜசேகா் உள்ளிட்டோா் உரையாற்றினா். இதில், மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில பாஜக அரசைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.