திருச்சி-கரூா்பயணிகள் ரயில் இன்று ரத்து
By DIN | Published On : 02nd August 2023 03:26 AM | Last Updated : 02nd August 2023 03:26 AM | அ+அ அ- |

திருச்சியில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக திருச்சி-கரூா் பயணிகள் ரயில் புதன்கிழமை (ஆக. 2) இயக்கப்படாது என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு- திருச்சியில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சியில் இருந்து கரூருக்கு காலை 9.45 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் புதன்கிழமை (ஆக.2) இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.