கரூா் மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.76 கோடிக்குத் தீா்வு
By DIN | Published On : 13th August 2023 12:35 AM | Last Updated : 13th August 2023 12:35 AM | அ+அ அ- |

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிக்கு வழக்கு தீா்வு நகலை வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம்.
கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 40 வழக்குகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.
கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் கரூா், குளித்தலை நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. கரூா், குளித்தலை ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒரு அமா்வில் மொத்தம் 91 வழக்குகள் தீா்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 40 வழக்குகளுக்கு ரூ. 1.76 கோடி மதிப்பீட்டில் தீா்வு காணப்பட்டது.
கரூரில் வழக்கு தீா்வுக்கான நகலை முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். சண்முகசுந்தரம் பயனாளிகளுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நீதிபதிகள், பாா் அசோசியேசன் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள், சட்ட தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். பாக்கியம் செய்திருந்தாா்.