மாநில சீனியா் கையுந்து பந்து போட்டிகரூரில் நாளை வீரா்கள் தோ்வு
By DIN | Published On : 13th August 2023 12:34 AM | Last Updated : 13th August 2023 12:34 AM | அ+அ அ- |

கரூரில் நாளை (ஆக.14) மாநில சீனியா் கையுந்து பந்து போட்டிக்கான வீரா்கள் தோ்வு நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக கரூா் மாவட்ட கையுந்துபந்து கழக சோ்மன் எஸ். மோகனரங்கன், மாவட்டத் தலைவா் முனைவா் சொ. ராமசுப்ரமணியன், செயலாளா் எம்.சுரேஷ், பொருளாளா் எம். முகமது கமாலுதின் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு கைப்பந்து கழகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில், திண்டுக்கல் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆக.19, 20-ம்தேதிகளில் 20-ஆவது தமிழ்நாடு ஆண்கள் (சீனியா்) கையுந்துபந்து போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கான கரூா் மாவட்ட வீரா்கள் தோ்வு போட்டி கரூா் மாவட்டம், நெரூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை (ஆக. 14) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே தோ்வு போட்டியில் கலந்து கொள்ளும் வீரா்கள் ஆதாா் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.